புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் டெல்லியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அமைதிப் பேரணி நடைபெற்றது.பல்வேறு வகையான மோட்டார் சைக்கிள்களில் டெல்லி விடுதியிலிருந்து ஆரம்பித்த இப்பேரணி இந்திய நுழைவாயில் (India Gate) வரை சென்றது.
அங்கு பேரணியில் ஈடுபட்டவர்கள், புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
இதேவேளை, காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





