LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, February 17, 2019

குஷல் ஜனித் பெரேரா அபாரம் – இலங்கை அணிக்கு அசத்தல் வெற்றி

தென்னாபிரிக்க அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி ஒரு விக்கட்டினால் அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸ்காக துடுப்பெடுத்தாட களம் இறங்கிய தென்னாபிரிக்க அணி 235 ஓட்டங்களையும், இலங்கை அணி 191 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டன.

இதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸ்காக துடுப்பெடுத்தாட களம் இறங்கிய தென்னாபிரிக்க அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 259 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் தென்னாபிரிக்க அணி சார்பில் டுபிளசிஸ் 90 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்ததுடன், பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் அறிமுக போட்டியில் விளையாடிய லசித் அம்புல்தெனிய 5 விக்கட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து 304 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாட களம் இறங்கிய இலங்கை அணி 9 விக்கட்டுக்களை இழந்து 304 ஓட்டங்களை பெற்று 1 விக்கட்டினால் அபார வெற்றி பெற்றுள்ளது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் சிறப்பாக விளையாடிய குஷல் ஜனித் பெரேரா இறுதி வரை ஆட்டமிழப்பின்றி 153 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தார்.

இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி ஒன்றுக்கு பூச்சியம் என்ற அடிப்படையில் முன்னிலை பெற்றுள்ளது

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7