நடிகர் ஜி.வி பிரகாஷ் நடிக்கும் புதிய படம் இன்று (சனிக்கிழமை) பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.ஜி.வீ பிரகாஷ் சர்வம் தாளமயம் திரைப்படத்திற்கு பிறகு தற்பொழுது இயக்குனர் எழில் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.
அபிஷேக் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு சத்யா இசையமைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விஷ்ணுவிகால் மற்றும் நிவேதா பெத்துராஜ் நடித்த ஜகஜாலக் கில்லாடி படத்தை தற்போது இயக்கி வருகின்றார். இதனையடுத்து அவர் ஜீ.வி.பிரகாஷின் இப்புதிய படத்தினை இயக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





