பிரித்தானியாவின் சவுதி அரேபியாவிற்கான ஆயுத விநியோகம், யேமனில் ஏராளமான பொதுமக்களின் உயிரிழப்பிற்கு காரணமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில், அவசர நடவடிக்கையாக சவுதிக்கான ஆயுத விநியோகத்தை நிறுத்துமாறு பிரதமர் தெரேசா மே வலியுறுத்தப்பட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தின் சர்வதேச விவகாரங்களுக்கான குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றில் இத்தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.
சவுதிக்கு 4.7 பில்லியன் மதிப்பிலான ஆயுதங்களை விநியோகிப்பதற்கு பிரித்தானியா உரிமம் பெற்றுள்ளது.
ஆனால், அதிகரித்துவரும் மனிதாபிமான பேரழிவுகள் காரணமாக ஆயுத விநியோகத்திற்கான தடை குறித்து அழுத்தங்களை பிரதமர் மே எதிர்நோக்கி வருகிறார்.
யேமனிலுள்ள ஹெளதி கிளர்ச்சியாளர்கள் மீது சவுதி அரேபிய கூட்டுப் படை கடந்த 2015ஆம் ஆண்டு முதல் விமானத் தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது.
அதிலிருந்து யேமன் உள்நாட்டுச் போர் தீவிரமடைந்து, ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். இலட்சக்கணக்கானவர்கள் வீடுகளை விட்டு வெளியேறி தவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது





