LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, February 19, 2019

ஸ்டெர்லைட் விவகாரத்தில் நிரந்தர தீர்வு எட்ட முடியும் – திருமாவளவன்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருப்பது வரவேற்கத்தக்கது என விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னையில், சிந்தனை சிற்பி சிங்காரவேலரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினார். இதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தமிழக அமைச்சரவையில் கொள்கை முடிவு எடுத்தால் மட்டுமே, ஸ்டெர்லைட் விவகாரத்தில் நிரந்தர தீர்வு எட்ட முடியும் என்று திருமாவளவன் வலியுறுத்தினார்.

மேலும் எதிர்க்கட்சிகளின் போராட்டம் குறித்த தமிழிசையின் விமர்சனத்துக்கும் பதிலளித்த அவர், ஆளும்கட்சிக்குரிய கடமைகளை அவர்கள் செய்வது போல எதிர்க்கட்சியும் அதன் செயற்பாடுகளையே செய்து வருகின்றது. இந்நிலையில் எதிர்க்கட்சியின் செயற்பாட்டில் ஆளும்கட்சி பொறாமைப்படுகின்றனர் என கூறினார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7