
குறித்த பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் வாகன நிறுத்திமிடத்திலேயே நேற்று(புதன்கிழமை) மாலை இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தின்போது குறித்த வீட்டிலிருந்த ஐந்து குடும்ப உறுப்பினர்களும், அவர்களது செல்லப்பிராணிகளும் காயங்கள் ஏதும் இன்றி அதிஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீ விபத்துத் தொடர்பாக அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் கடும் போராட்டத்திற்கு பின்னர் தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந்த தீ விபத்துக் காரணமாக வாகன நிறுத்துமிடம் மற்றும் அதனோடு இணைந்த இரண்டு மாடிகளைக் கொண்ட குடியிருப்பு ஒன்றும் முற்றாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
