இந்திய தேர்தல் ஆணையத்தில் வெற்றிடமாக இருந்த குறித்த பதவிக்கு மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையராக இருந்த சுஷில் சந்திரா நியமிக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் இவ்வருடம் நடைபெறவுள்ளது. இத்தேர்தலுக்கான கூட்டணி அமைக்கும் பேச்சுவார்த்தையில் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையாளர் பதவிக்கு சுஷில் சந்திரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 1980 ஆம் ஆண்டு இந்திய வருவாய் பிரிவின் அதிகாரியாக இவர் பணியாற்றியிருந்தார். இதன்பின்னர் மத்திய நேரடி வரிகள் விதிப்புத் தலைவராக பதவி வகித்த இவரின் பதவி காலம் 2019 ஆம் ஆண்டு மே மாதம் வரை உள்ளமை குறிப்பிடத்தக்கது.






