LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, February 14, 2019

ஆந்திராவில் விவசாயிகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவித் திட்டம்

ஆந்திராவில் விவசாயிகளுக்கு மத்திய அரசு நிதியுடன் ரூ.4 ஆயிரம் சேர்த்து மொத்தம் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

இந்த நிதியுதவித் திட்டத்துக்கு ‘அன்னத்தா சுக்கிபவா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்படும் என்று அறிவித்தது.

இதன்மூலம் 5 ஏக்கருக்குள் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு இந்த நிதியுதவி அளிக்கப்படவுள்ளதாகவும், குறிப்பிட்ட விவசாயிகளை கணக்கெடுத்து அனுப்பும் படியும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.

இந்த நிலையில் ஆந்திராவில் விவசாயிகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

இத்திட்டத்தின் கீழ் குத்தகை விவசாயிகள் உட்பட அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த தொகை 2 தவணைகளாக ரூ.5 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்படும்.

ஆந்திராவில் மொத்தம் 76 இலட்சத்து 21 ஆயிரம் விவசாயிகள் உள்ளநிலையில் அனைத்து விவசாயிகளுக்கும் நிதியுதவி வழங்க ஆந்திர அரசு முடிவுசெய்துள்ளது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7