LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, February 18, 2019

பா.ஜ.க. -அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை: அமித் ஷா சென்னை விஜயம்

பாரதீய ஜனதாவின் தேசியத் தலைவர் அமித் ஷா நாளை (செவ்வாய்க்கிழமை) சென்னைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. – அ.தி.மு.க. கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைக்காகவே அவர் சென்னைக்கு விஜயம் செய்வதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.திமு.க.வுடன் கூட்டணி அமைக்க பா.ஜனதா கட்சி கடும் முயற்சி எடுத்து வருகிறது. குறைந்தது 10 தொகுதிகளை கேட்டுப்பெற வேண்டும் என்பதில் பா.ஜனதா உறுதியாகவுள்ளது.

இதற்காக மத்திய அமைச்சர்களான பியூஸ்கோயல், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் இருமுறை பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில், பா.ஜ.க. – அ.தி.மு.க. கூட்டணியை உறுதிப்படுத்தவும் தொகுதிப் பங்கீடு தொடர்பாக முடிவெடுக்கவுமே அமித் ஷா சென்னைக்கு விஜயம் செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7