மும்பையை சேர்ந்த மருந்து நிறுவனமொன்று காஷ்மீர் தாக்குதல் சம்பவத்தில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்ட ஊழியரை பணி இடைநீக்கம் செய்துள்ளது.குறித்த நபர் காஷ்மீரில் நடந்த தாக்குதலில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக தனது முகநூல் பக்கத்தில் கருத்தொன்றை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர், “இது தான் உண்மையான சர்ஜிக்கல் ஸ்டிரைக்” என கூறியுள்ளார்.
ஒட்டுமொத்த நாடே சோகத்தில் மூழ்கிய நிலையில், பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக அந்தநபர் கருத்து பதிவிட்டது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.






