LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, February 18, 2019

திருகோணமலை மாவட்டம் , மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

திருகோணமலை மாவட்டம் , மூதூர்  பிரதேச செயலகப் பிரிவில் முன்னெடுக்கப்பட்ட  பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் அவர்களால் நேற்று  (17)  ஞாயிற்றுக்  கிழமை உத்தியோகபூர்வமாக  திறந்து வைத்து மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

மூதூர் பிரதேச செயலக பிரிவின் தோப்பூர்,பாலத்தோப்பூர்,ஆசாத் நகர்,கூர்கண்டம்,இக்பால் நகர்,58,59 ஆகிய பகுதிகளில்  கொங்ரீட் வீதிகள் உள்ளிட்ட இன்னும் பல பகுதிகளிலும் புதிய வீதிகள் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

பல மில்லியன்கள் ரூபா செலவில் அமுல்படுத்தப்பட்ட இக் குறித்த அபிவிருத்திப் பணிகள் கிராமிய அபிவிருத்திக்கு இட்டுச் செல்லும் நோக்கில் நடை முறைப்படுத்தப்பட்டு வருகின்ற திட்டங்களாகும்.

மக்கள் பிரச்சினைகளை ஆராய மக்கள் சந்திப்புப் குறித்த ஒவ்வொரு பகுதிகளிலும் இடம் பெற்றது.

குறித்த அபிவிருத்தி திட்டங்கள் கம்பரெலிய, கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி விசேட நிகழ்ச்சித் திட்டம், நீண்டகாலம் இடம் பெயர்ந்தோரை மீள்குடியேற்றுவதற்கான திட்ட முகாமைத்துவ அலகு உள்ளிட்ட திட்டங்கள் ஊடாக பிரதியமைச்சரின் நிதி ஒதுக்கீட்டில் நடை முறைப்படுத்தப்பட்டன.

தோப்பூர் ஜூனியர் கனிஷ்ட வித்தியாலய குறைபாடுகள், மஸ்ஜித் நூர் பள்ளிவாயல் நிதி ஒதுக்கீடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடல் இடம் பெற்று விரைவான தீர்வுகளை பெற்றுத் தருவதாகவும் பிரதியமைச்சர் இதன் போது தெரிவித்தார்.

குறித்த அபிவிருத்தி நிகழ்வுகளில் பிரதியமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா, கனிய மணல் கூட்டுத் தாபன நிறைவேற்றுப் பணிப்பாளர் அப்துல் றசாக் நளீமி, இணைப்பாளர் ஈ.எல்.அனீஸ், கிண்ணியா நகர சபை உறுப்பினர்களான நிஸார்தீன் முஹம்மத்,எம்.எம்.மஹ்தி, மூதூர் பிரதேச சபை உறுப்பினர்களான ஜெஸீலா,றிபாஸ் மற்றும் தோப்பூர் பிரதேச சபை உறுப்பினர் ஏ.சி.அன்வர், வெருகல் பிரதேச சபை உறுப்பினர் ஸ்ரீகாந்த் ,முன்னால் மூதூர் பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஜீ.நிஸ்மி உட்பட கட்சி ஆதரவாளர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.


அ .அச்சுதன்




 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7