லைக்கா புரொடக்ஷன்ஸின் பிரம்மாண்டத் தயாரிப்பில் சூர்யா – கே.வி.ஆனந்த் கூட்டணியில் உருவாகிவரும்`காப்பான்’ திரைப்படம் இந்தியாவின் சுதந்திரதினத்தை முன்னிட்டு வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.இந்தப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், நடிகர் ஆர்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கதாநாயகியாக சாயிஷா சய்கல் நடிக்க இவர்களுடன் சமுத்திரக்கனி, போமன் இரானி, சிரக் ஜனி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.
விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் படத்தின் படப்பிடிப்புக்களில் மோகன்லால் சம்பந்தப்பட்ட காட்சிகள் நேற்றுடன் முடிவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது.
தற்போது கிழக்குக் கடற்கரைச் சாலையில் பாடல் காட்சியை படக்குழு படமாக்கி வருவதாகவும், அடுத்ததாக அமெரிக்கா சென்று அங்கு ஒரு பாடலைப் படமாக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.





