
போர்ட் எலிசபெர்த்தில் இன்று ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மனித்தது களமிறங்கியது.
இதில் ஆரம்பம் முதல் விக்கெட்களை இழந்து தடுமாறிய தென்னாபிரிக்க அணி, முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 222 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அவ்வணி சார்பில் குயின்டன் டி கொக் 86 ஓட்டங்களையும், மார்கரம் 60 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொண்டனர்.
பந்து வீச்சில் விஸ்வ பெர்னாண்டோ மற்றும் ராஜித ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், தனஞ்சய டி சில்வா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
இதனை அடுத்து இலங்கை அணி தற்போது தனது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வருகின்றது.
