
அதிலும் ஓமானில் நடைபெறும் டுவர் ஒஃப் ஓமான் (வுழுருசு ழுகு ழுஆயுN) சைக்கிளோட்ட பந்தயத்துக்கு தனிச் சிறப்பு உண்டு.
கடந்த 16ஆம் திகதி ஆரம்பமான டுவர் ஒஃப் ஓமான் சைக்கிளோட்ட பந்தயம், நாளை வரை, நடைபெறவுள்ளது.
இந்த பந்தயம் மொத்தம் 6 சுற்றுகளாக நடைபெறுகின்றது. மொத்தம் 906 கிலோ மீற்றர் தூரத்தை நோக்கி சைக்கிளோட்ட பந்தய வீரர்கள் பயணிக்க வேண்டும்.
906 கிலோ மீற்றர் தூரத்தை 6சுற்றுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொறு கட்டமாக போட்டிகள் நடைபெறும். இதில் அதிக சுற்றுகளில் வெற்றிபெற்று அதிக புள்ளிகள் பெற்ற வீரர் சம்பியனாக தெரிவுசெய்யப்படுவார்.
ஏற்றம், இறக்கம் நிறைந்த பதைகளில் நடைபெறும் இந்த பந்தயத்தில் பிரபல அணிகளை சேர்ந்த பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்று வருகின்றனர்.
சரி! தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் டுவர் ஒஃப் ஓமான் சைக்கிளோட்ட பந்தயத்தின், 5ஆவது கட்ட முடிவினை பார்க்கலாம்.
டுவர் ஒஃப் ஓமான் சைக்கிளோட்ட பந்தயத்தின், 5ஆவது கட்டம் நேற்று நடைபெற்றது.
சமயிலிருந்து, ஜபல் அல் அக்தர் வரையிலான மலைத்தொடர் நிறைந்த 152 கிலோ மீற்றரை நோக்கி பந்தய வீரர்கள் புறப்பட்டனர்.
இதில், கசகஸ்தானின் அலெக்ஸி லுட்சென்கோ பந்தய தூரத்தை 3 மணித்தியாலங்கள் 44 நிமிடங்கள் 3 செக்கன்களில் நிறைவு செய்து முதலிடம் பிடித்தார்.
இவரையடுத்து, பிரான்ஸின் பெஃபின் கிரெலெய்ர் பந்தய தூரத்தை 3 மணித்தியாலங்கள் 44 நிமிடங்கள் 10 செக்கன்களில் நிறைவு செய்து இரண்டாவது இடத்தை பிடித்தார்.
இவரைதொடர்ந்து, இத்தாலியின் டோமினிகோ போஸ்சோவிவோ பந்தய தூரத்தை 3 மணித்தியாலங்கள் 44 நிமிடங்கள் 14 செக்கன்களில் நிறைவு செய்து மூன்றாவது இடத்தை பிடித்தார்
