வின்னிபெக்கில் முதியவர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.911 என்ற அவசரப் பிரிவிற்கு கிடைத்த அழைப்பினையடுத்து வீடு ஒன்றிற்கு விரைந்த பொலிஸார், இரத்த வெள்ளத்தில் கிடந்த முதியவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
எனினும் குறித்த முதியவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். உயிரிழந்தவரின் சடலத்தில் காயங்கள் காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள பொலிஸார், உயிரிழந்தவர் குறித்த மேலதிகத் தகவல்களை வெளியிட மறுப்பு தெரிவித்துள்ளனர்.





