
Kitchener இல் நேற்று(வியாழக்கிழமை) நண்பகல் பொலிஸ் அவசரப் பிரிவிற்கு கிடைத்த அழைப்பினையடுத்து வீடு ஒன்றிற்கு விரைந்த பொலிஸார், அசைவுகள் எதுவும் அற்றநிலையில் இருந்த குழந்தையினை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
எனினும் குழந்தை உயிரிழந்தமையினை மருத்துவர்கள் உறுதி செய்தனர். அத்துடன், குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் குறிப்பிட்டனர்.
இந்தநிலையில் இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் உயிரிழந்த குழந்தையின் தாயிடம் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
