LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, February 15, 2019

பெல்கனியில் இருந்து நெடுஞ்சாலையில் நாற்காலியை வீசியெறிந்த பெண்ணுக்கு பிணை!

ரொறென்ரோவில் மிகவும் நெரிசல் மிக்க நெடுஞ்சாலையான கார்டிநெர் பகுதியில் மாடிக் குடியிருப்பில் வசிக்கும் பெண்ணொருவர் பெல்கனியில் இருந்து நாற்காலி மற்றும் சில பொருட்களை வீசியெறிந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

மார்செல்லா ஸொய்யா என்ற 19 வயதான பெண் பொது இடையூறு, இடர் உண்டாக்கும் குறும்புச் செயல், சொத்துக்களுக்கு சேதமிழைப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் நேற்று (புதன்கிழமை) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்படி, அவருக்கு 5,000 அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டதுடன், 2000 டொலர் பெறுமதியான பிணையும் வழங்கப்பட்டது.

அத்துடன், அந்த பெண்ணுக்கு சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன. ஸொய்யா தனது தாயுடன் வசிக்க வேண்டும் என்றும், குறும்புச் செயலுக்கு உடந்தையாக இருந்த நான்கு பேருடன் எந்த தொடர்புகளையும் பேணக் கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதேவேளை, அவர் ஆயுதங்களை வைத்திருப்பதற்கும், மீண்டும் ரொறென்டோவில் உள்ள ‘கொண்டோ’ கட்டிடத்திற்கு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் அடுத்த வாரம் ஸொய்யா நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அந்த பெண் மாடியிலிருந்து நாற்காலியை வீசியெறியும் காணொளி சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்ட நாளில் இருந்து சுமார் 930,000 தடவைகள் அந்த காணொளி பார்க்கப்பட்டுள்ளது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7