LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, February 15, 2019

மிசிசாகாவில் உள்ள வீடு ஒன்றிலிருந்து பெண் ஒருவரின் உடல் கண்டெடுப்பு

மிசிசாகாவில் உள்ள வீடு ஒன்றிலிருந்து பெண் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒருவரைக் கைது செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பர்ன்ஹாம்ஹார் வீதி வெஸ்ட் மற்றும் ரிச்வே டிரைவ் பகுதியில், ருஷ்டன் க்ரெஸ்ஸன் இல் உள்ள வீடு ஒன்றுக்கு, நேற்று காலை 7.15 அளவில் பொலிஸார் அழைக்கப்பட்டனர்.

அங்கு சென்ற போது, அந்த வீட்டினுள் 74 வயதான பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

அங்கிருந்து ஆண் ஒருவர்பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்ட போதிலும், அவர் மீது எவ்வாறான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன என்ற தகவல்கள் எதனையும் பொலிஸார் வெளியிடவில்லை.

தற்போது குறித்த இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை, காணாமல் போனோர் குறித்த விசாரணைப் பிரிவினரும், கொலை தொடர்பான சிறப்பு விசாரணைப் பிரிவினரும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்தோர் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசாரணைகள் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளதனால், குறித்த அந்தப் பெண் எவ்வாறு உயிரிழந்தார் என்பது குறித்தோ, உயிரிழந்தவருக்கும் கைது செய்யப்பட்டுள்ளவருக்கும் இடையே எவ்வாறான உறவு என்பது தொடர்பாகவும் தகவல்கள் எதனையும் வெளியிடமுடியவில்லை எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7