அதிக விற்பனை மற்றும் வருமான வரி மூலமான வருவாய், 1 பில்லியன் டொலராக காணப்படுவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் விக் ஃபெடெலி தெரிவித்துள்ளார்.
நேற்று (புதன்கிழமை) விக் ஃபெடெலி, ஒன்ராறியோவின் 2018-19 மூன்றாம் காலாண்டு நிதி விபரங்களை வெளியிட்டார். இதன் போதே அவர் குறித்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை ஒன்ராறியோவின் நிதி பொறுப்பு அதிகாரி, பற்றாக்குறை உண்மையில் சுமார் $ 2.5 பில்லியனை விட குறைவாக உள்ளது என்றும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.






