LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, February 11, 2019

பன்றிக்காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ராஜஸ்தானில் பன்றிக்காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100ஆக அதிகரித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவிவருகின்றது.

ஜோத்பூர், கோடா, தவுசா மாவட்டங்களில் பன்றிக்காய்ச்சலுக்கு இலக்காகி நேற்று (சனிக்கிழமை) 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 87 பேருக்கு புதிதாக இந்தநோய் அறிகுறி ஏற்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக ஜோத்பூரில் 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 39 தினங்களில் ராஜஸ்தானில் 2793 பேருக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை  அறிவித்துள்ளது.

குஜராத், பஞ்சாப் மாநிலங்களிலும் இந்த நோய் அதிகரித்துள்ளது. குஜராத்தில் கடந்த 7ஆம் திகதிவரை இந்த நோயினால் சுமார் 54 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 1187 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று, பஞ்சாபில் 30 பேர் உயிரிழந்துள்ளதுடன் 301 பேருக்கு இந்த நோய்பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7