ட்ரம்ப் நிர்வாகத்தில் பொறுப்பு வகிக்கும் பல அதிகாரிகளின் பதவி விலகலின் தொடர்ச்சியாக இந்த சிரேஷ்ட அதிகாரியின் விலகல் அமைந்துள்ளது.
தனது பதவி விலகல் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது குடும்பத்தினருக்காக வீட்டிற்கு செல்ல வேண்டிய தருணம் வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அவசர முகாமைத்துவ பிரிவில் பணியாற்றியமை தனது வாழ்நாளில் கிடைத்த முக்கிய வாய்ப்பாக கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த 2017ஆம் ஆண்டு முதல் இப்பதவியில் வகித்த அவர் பல தீவிர இயற்கை பேரழிவுகளின்போது முன்னின்று செயற்பட்டவராவார்.
இவர் தனது பதவிக்காலத்தில் 220இற்கும் மேற்பட்ட பேரழிவுகளின்போது மக்கள் பணிகளுக்கு தலைமைத்தாங்கி செயற்பட்டவர் என்பது குறிப்பிட்டத்தக்கது.






