LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, February 15, 2019

ஈரான் குண்டுத் தாக்குதலில் குறைந்தபட்சம் 20 பாதுகாப்பு படையினர் உயிரிழப்பு!

ஈரானிய உயரடுக்கு துணை இராணுவப் புரட்சிக் காவல்படையினரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறைந்தபட்சம் 20 பேர் உயிரிழந்ததாக ஈரான் தேசிய ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது.

நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தின் சிஸ்டான் பகுதியிலேயே இன்று (புதன்கிழமை) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

படையினர் பயணித்த பேருந்து ஒன்றை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் மேலும் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

எனினும் இந்த தாக்குதல் தொடர்பில் உடனடியாக எந்த அமைப்பினரும் உரிமை கோரவில்லை.

போலந்து தலைநகர் வார்ஷோவில் இடம்பெற்ற அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையினரின் சந்திப்பை தொடர்ந்து ஓரிரு நாட்களின் பின்னர் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் பரந்தளவில் ஈரான் தவறான செல்வாக்கு ஊடுருவி இருப்பதாக அமெரிக்கா இந்த கருத்தரங்கின் போது சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7