LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, February 15, 2019

அபுதாபியில் உலக வங்கி கிளை அலுவலகம் திறப்பு – டுபாயில் உடன்படிக்கை கைச்சாத்து!

அபுதாபியில் உலக வங்கியின் கிளை அலுவலகம் ஒன்றை திறப்பது தொடர்பான உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

டுபாய் மதினத் ஜுமைராவில் உலக அரசாங்கங்களின் உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் 140 நாடுகளைச் சேர்ந்த 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரக நிதித்துறை துணை அமைச்சர் ஒபைத் ஹுமைத் அல் தயார் மற்றும் உலக வங்கி குழும மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கான துணைத்தலைவர் பரித் பெல்கஜ் ஆகியோர் முன்னிலையில் அபுதாபி  சர்வதேச சந்தைப்படுத்தல் தலைமை செயல் அலுவலர் காலித் அல் சுவைதி மற்றும் உலக வங்கி வளைகுடா நாடுகளுக்கான இயக்குனர் இசாம் அபுசுலைமான் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இதன் மூலம் உலக வங்கியின் கிளை அலுவலகம் அபுதாபி சர்வதேச சந்தையில் விரைவில் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அலுவலகம் கொள்கை முடிவுகள் தொடர்பான ஆய்வுகள், அரசுத்துறைகளின் மேம்பாட்டு திட்டங்களுக்கு தேவையான தொழில்நுட்ப உதவியை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஏற்றவகையில் இருக்கும்.

அமீரக துணை அமைச்சரும், அபுதாபி சர்வதேச சந்தைப்படுத்தல் தலைவருமான அகமது அலி அல் சயீக் இதுபற்றி கூறுகையில், “உலக வங்கியின் புதிய கிளை அலுவலகம் அமீரக பொருளாதார மேம்பாட்டுக்கு உதவியாக இருக்கும்.
மேலும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளவும் உதவும்” என்று தெரிவித்தார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7