ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பொதுஜன பெறமுன கட்சிகள் இணைந்த புதிய கூட்டணியை இறுதிசெய்ய ஆறு பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற கட்சி தலைவர் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய அரசியல் கூட்டணி, யாப்பு தயாரிப்பு உட்பட்ட விடயங்கள் குறித்த இந்த குழு தீர்மானித்து அடுத்த கூட்டத்தில் சமர்ப்பிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.





