
காஷ்மீர் படைப்பிரிவை சேர்ந்த 16 இராணுவ வீரர்கள் நேற்று காலை ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் 6 வீரர்கள் சிக்கிக்கொண்டனர்.
இந்நிலையில், ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டதோடு, ஏனையோரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மேலும், அப்பகுதியில் கடும் பனிச்சரிவு ஏற்பட்டிருப்பதால் ஏனைய வீரர்களை இரவுவரை தேடியும் மீட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவர்கள் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகக் காணப்படுவதாகவும் இவர்கள் உயிரிழந்திருக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகின்றது.
இந்த நிலையில், தொடர்ந்தும் அப்பகுதிகளில் 150க்கும் மேற்பட்டோர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
