
தலைநகர் சியோலை இன்று (வியாழக்கிழமை) சென்றடைந்த அவருக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
பிரதமர் மோடியின் இந்த சுற்றுப்பயணத்தின் போது, இருநாடுகளுக்கு இடையேயான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிகின்றது. சியோல் நகரில் உள்ள லோட்டே ஹோட்டலில் (Lotte Hotel Seoul) பிரதமர் மோடியை இந்திய வம்சாவளியினர் உற்சாகமாக வரவேற்றனர்.
தென்கொரிய விஜயத்தை முன்னிட்டு பிரதமர் மோடி டுவிட்டர் பக்கத்தில் இந்த பயணம் குறித்து பதிவொன்றையும் வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், ‘மேக் இன் இந்தியா’உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய முன்னெடுப்பு திட்டங்களில் தென்கொரியா முக்கிய பங்காளியாக திகழ்கின்றது.
அந்தவகையில், இரு ஜனநாயக நாடுகளும் பிராந்திய மற்றும் சர்வதேச அமைதி ஆகிய விவகாரங்களில் மதிப்பு மிக்க கொள்கைகளையும் தொலைநோக்கு பார்வையையும் கொண்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
