அவரை, இந்திய தொலை தொடர்புகள் அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் விமான நிலையத்தில் வைத்து வரவேற்றுள்ளார். இதன் போது ஆர்ஜன்டீன ஜனாதிபதிக்கு, இந்திய கலாசார முறைபடி அமொக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.
ஆர்ஜென்டீன ஜனாதிபதி நாளை இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்.
இதன்போது அணுவாயுதம், பொருளாதாரம், விவசாயம், விஞ்ஞானம், தொழினுட்பம், கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை சம்பந்தமாக கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
இந்தியாவுக்கும், ஆர்ஜன்டீனாவுக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகள் ஏற்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டே ஆர்ஜென்டீன ஜனாதிபதி இந்தியாவை சென்றடைந்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையில் மருத்துவ ரீதியான பரிமாற்றங்கள் இடம்பெறுவதுடன், மேலும் பல வர்த்தக செயற்பாடுகளும் இடம்பெறுகின்றன.
கடந்த 2012 ஆம் ஆண்டு 1 தசம் 8 அமெரிக்க டொலர் பெறுமதியாக வர்த்தகம் ஆர்ஜென்டீனாவுடன் இடம்பெற்றுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.






