இந்தியாவிற்கு இரண்டு நாட்கள் அரசமுறை விஜயமாக சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் டெல்லியை சென்றடைந்தார்.டெல்லி விமான நிலையத்தை சென்றடைந்த இளவரசரை பிரதமர் நரேந்திர மோடி உற்சாகமாக வரவேற்றார்.
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், முதலாவது அரச முறை பயணமாக பாகிஸ்தான், இந்தியா, மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய 4 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறார். அந்தவகையில் பாகிஸ்தானுக்கான பயணத்தையடுத்து அவர் இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளார்.
இந்த விஜயத்தில், பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்ட அரச தலைவர்களை சவுதி இளவரசர் சந்தித்துப் பேசவுள்ளார்.
இந்த சந்திப்பில், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை, எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளன.





