LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, February 19, 2019

போதைப்பொருள் பாவனையில் ஈடுபடும் உறுப்பினர்களை அடையாளப்படுத்துக – சபாநாயகர்

போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுவோர் நாடாளுமன்றில் இருப்பார்களாயின் அவர்களை அடையாளப்படுத்துமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவ்வாறானவர்களை எழுத்து மூலம் அறிவித்தால் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கத் சபாநாயகர் தயாராகவிருப்பதாக நாடாளுமன்றத்தின் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

போதைப்பொருள் பாவனை தொடர்பாக ரஞ்சன் ராமநாயக்க தொலைபேசி ஊடாக சபாநாயகருக்கு நேற்று (திங்கட்கிழமை) அறிவித்திருந்த போதிலும், தொலைபேசியூடாக அறிவிக்காமல் எழுத்து மூலம் அறிவிக்குமாறு சபாநாயகர் தெரிவித்ததாக ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இவ்வாறு எழுத்துமூலமான முறைப்பாடுகள் குறித்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடி முடிவெடுக்கப்படும் என்றும் சபாநாகர் குறிப்பிட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7