ராஜஸ்தான் மாநிலம் பிகானர் மாவட்டத்தில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என குறித்த மாவட்ட ஆட்சியர் குமார் பால் கௌதம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.புல்வாமாவில் கடந்த வாரம் பயங்கரவாத இயக்கம் நடத்திய தற்கொலைத் தாக்குதலையடுத்தே இந்த அதிரடியான உத்தரவை அவர் பிறப்பித்தார்.
அந்தவகையில், பிகானர் மாவட்டத்தில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் அடுத்த 48 மணி நேரத்தில் மாவட்டத்தை விட்டு வெளியேற வேண்டுமென உத்தரவிட்டு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகள் என அனைத்து நிறுவனங்களுக்கும் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு 2 மாதங்கள் வரை செல்லுபடியாகும். மேலும் பாகிஸ்தான் சிம் அட்டைகளைப் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.





