LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, February 20, 2019

பண்டாரிக்குளம் முத்துமாரியம்மனின் இராஜகோபுரத்துக்கான கால்கோள் விழா

பண்டாரிக்குளம் முத்துமாரியம்மன் ஆலய பஞ்சதள இராஜ கோபுரம் அமைப்பதற்கான கால்கோள் விழா இன்று (செவ்வாய்க்கிழமை) வெகுசிறப்பாக நடைபெற்றது.

இவ்விழா, சிவஶ்ரீ. ச. சங்கரதாஸ் குருக்கள் தலைமையில் அவரது புதல்வர்களான சிவஶ்ரீ. ச. ஶ்ரீவிவேக் குருக்கள்(ரகு ஐயா), பண்டாரிகுளம் முத்துமாரியம்மன் ஆலய குரு சிவஶ்ரீ. ச. ஶ்ரீராகுல சர்மா மற்றும் சிவஶ்ரீ. ச. பாலமுரளி சர்மா ஆகியோரின் அருளாசியுடன் ஆலய சிற்பி திரு. வினோஶ்ரீயின் முன்னேற்பாட்டில் இடம்பெற்றது.

சுமார் 4.5 கோடி ரூபாய் செலவில் அம்பாளுக்கு அமையவுள்ள இராஜ கோபுரத் திருப்பணி மூன்று வருடங்களில் நிறைவுற்று குடமுழுக்குப் பெருவிழாவான கும்பாபிஷேகப் பெருவிழா நடைபெற உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்த கோபுர தரிசனத்துக்காக புலம்பெயர்ந்து வாழும் ஈழத்து உறவுகளின் உதவிகளையும் ஆலய நிர்வாகம் எதிர்பார்த்துள்ளது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7