கனடாவின் தென்கிழக்கு கல்கரி பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் சில வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த வெடிப்புச் சம்பவம் தென்கிழக்கு கல்கரி பகுதியிலுள்ள வீடு ஒன்றில் நேற்று முந்தினம் மாலை இடம்பெற்றுள்ளது.
இந்த வெடிப்புச் சம்பவத்தினையடுத்து, அருகிலிருந்த வீடுகளுக்கு தீ பரவியுள்ளது. இதன் காரணமாக மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
இது தொடர்பாக, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் கடும் போராட்டத்திற்கு மத்தியில் தீயினை கட்டுப்படுத்தியுள்ளனர்.
இதன்போது ஒரு வீடு முழுமையாகவும் மேலும் சில வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தீ விபத்தில் சிக்கி உயிர்சேதம் ஏதும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
இந்தநிலையில் தீ விபத்துத் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





