LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, February 20, 2019

போலியான தொலைபேசி அழைப்புக்களினால் மோசடி: வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை

குயெல்ஃப் ஹைட்ரோ மற்றும் அலெக்ட்ரா யுடிலிடிஸ் ஆகிய நிறுவனங்கள், தங்களது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமது நிறுவனத்திலிருந்து அழைப்பு ஏற்படுத்துவதாகக் கூறி போலியான முறையில் சட்டவிரோத குழுவொன்று அழைப்புக்களை ஏற்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருவதாகக் குறித்த நிறுவனங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.

மேலும், நிலுவைக் கட்டணத்தை செலுத்தத் தவறினால் இணைப்பு துண்டிக்கப்படும் என்று சிலர் தொலைபேசி ஊடாக எச்சரிக்கை விடுப்பதாகவும், நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும் தானியங்கி அழைப்புக்கு நிகரான வகையில் இந்த அழைப்பு துல்லியமாக பதிவு செய்யப்பட்டு, வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படுவதாகவும் கூறப்படுகிறது.

சந்தேகத்திற்கு இடமான அழைப்புக்கள் ஏற்படுத்தப்பட்டால் அதுகுறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7