
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுடனான போட்டியில் இந்தியா கலந்துகொள்ளக்கூடாது என இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் டெல்லியில் நேற்று (புதன்கிழமை) தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கப்டனான சௌரவ் கங்குலி மேற்குறித்தவாறு கூறினார்.
இதுகுறித்து தெரிவித்த அவர், இம்முறை உலகக்கோப்பையில் இந்தியா ஒருபோட்டியில் விளையாடாமல்போனால் அணிக்கு பெரியஇழப்பு ஏதும் இல்லை. புல்வாமாவில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல் மிகவும் மோசமான ஒரு நிகழ்வாகும். இருநாடுகளுக்கிடையே எந்தவிதமான தொடர்பும் இருக்கக் கூடாது.
அத்துடன், இதுகுறித்து அரசு உறுதியான முடிவை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.
