LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, February 11, 2019

வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் – தமிழக முதல்வர்

தமிழகம் முழுவதும் உள்ள ஏழைத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா 2000 ரூபாய் சிறப்பு உதவித்தொகை வழங்கப்படவுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற, வரவு செலவு திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “தமிழ்நாடு முழுவதிலும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் அனைத்து குடும்பங்களுக்கும் 2000 ரூபாய் சிறப்பு உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.

குறித்த சிறப்பு உதவித்தொகை தமிழகம் முழுவதும் உள்ள 60 இலட்சம் குடும்பங்களுக்கு 1200 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படவுள்ளது.

இதன்மூலம் கிராமப்புறங்களில் வசிக்கும் 35 லட்சம் ஏழைத் தொழிலாளர் குடும்பங்களும், நகர்புறங்களில் 25 இலட்சம் தொழிலாளர் குடும்பங்களும் பயனடைய முடியும்” என கூறியுள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7