மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையின் உண்மைத்தன்மை பற்றி விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் அப்பல்லோ நிர்வாகம் மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த மனு தொடர்பிலான வழக்கு விசாரணை இன்று (திங்கட்கிழமை) நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன், ராமசாமி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன் போது இருதரப்பு விவாதங்களையும் செவிமெடுத்த நீதிபதிகள் இந்த வழக்கை எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.
அத்தோடு குறித்த வழக்கில் எவ்வித இடைக்கால தடையுத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனவும் நீதிபதிகள் அறிவித்தனர்.





