மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை பழிவாங்கும் நடவடிக்கையில் பா.ஜ.க தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.மதுரை தனக்கன் குளத்தில் தி.மு.க உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மத்தியில் இன்று (திங்கட்கிழமை) உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்திற்குள் நுழைய முடியவில்லை என்ற கோபத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ.க.வினர், அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வருகின்றனரெனவும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இதனாலேயே இரும்பு பெண்மணியான மம்தா, பா.ஜ.க.வுக்கு எதிராக போராட்டத்தை தற்போது ஆரம்பித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.





