காஷ்மீர் தற்கொலை குண்டு தாக்குதலில் வீரமரணமடைந்த படை வீரர்களுக்கு, இராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் மலரஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.தீவு மாணவ கூட்டமைப்பினால் குறித்த அஞ்சலி நிகழ்வுகள் நேற்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டோர், வீரர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி மலரஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தியுள்ளனர்.
ஜம்மு- காஷ்மீரில் மத்திய ஆயுத பொலிஸ் படையினர் மீது பயங்கரவாதிகள் மேற்கொண்ட தற்கொலைத் தாக்குதலில் 44க்கும் மேற்பட்ட படைவீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் பயங்கரவாதிகளின் செயற்பாட்டை கண்டித்து இந்தியாவின் பல பகுதிகளில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதேவேளை ஜம்முவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





