கனடா, அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கடந்த வருட இறுதியிலிருந்து கடும் பனிப்பொழிவு நிலவிவருகின்றது.குறிப்பாக கனடாவின் பலபகுதிகளிலும் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகின்றது.
இதன்காரணமாக அங்கு கடும் குளிருடனான காலநிலை நிலவி வருவதாக அந்நாட்டு காலநிலை அவதான நிலையில் குறிப்பிட்டுள்ளது.
மேலும் கடும் பனிப்பொழிவு காரணமாக எட்மன்டன், ஒட்டாவா உள்ளிட்ட பகுதிகளிலுள்ள பாடசாலைகள் மற்றும் கல்லுாரிகளுக்கு அவ்வப்போதும் விடுமுறையளிக்கப்பட்டு வருகின்றது.
இந்த கடும் பனிப்பொழிவு மக்களை வாட்டி வதைத்தாலும், மக்கள் பனிக்கட்டிகள் மற்றும் பனிப்படலம் சூழ்ந்து காணப்படும் பகுதிகளில் தங்கள் விடுமுறைகளைக் கொண்டாடி வருகின்றனர்.
இந்தநிலையில் இந்த மாதத்தில் கனேடிய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ள பனிப்படர்ந்த ஒளிப்படங்களின் தொகுப்பு உங்களுக்காக…….





