LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, February 19, 2019

அமெரிக்கா வெனிசுவேலா மக்களுக்கு துணை நிற்கும் – ட்ரம்ப்


அமெரிக்கா தொடர்ந்தும் வெனிசுவேலா மக்களுக்கு துணை நிற்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் தெரிவித்துள்ளார்.

அவர் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டுவிட்டில், ‘வெனிசுலா மக்கள் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்துக்காகப் போராடுகிறார்கள். அவர்களுக்கு அமெரிக்கா துணை நிற்கும்.

நான் வெனிசுலா ஜனாதிபதி மதுரோவின் ஆட்சியிலுள்ள ஒவ்வொருவரையும் கேட்டுக் கொள்கிறேன். வறுமை, மரணம், பசி அனைத்துக்கும் முடிவு கட்டுங்கள்.

உங்கள் மக்களைச் செல்ல விடுங்கள். வெனிசுலா மக்கள் ஒன்றுசேர வேண்டிய நேரமிது” என குறிப்பிட்டுள்ளார்.

தென் அமெரிக்காவில் எண்ணெய் வளம் மிக்க நாடுகளில் வெனிசுவேலாவும் ஒன்று. கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலில் நிக்கோலஸ் மதுரோ வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஜனாதிபதியானார். தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் செய்து மதுரோ வென்றிருப்பதாக சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்தன.

கடும் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு போன்றவற்றாலும், அரசியல் நிலையற்ற தன்மையாலும் வெனிசுவேலா திண்டாடி வருகிறது.

இந்தநிலையில் கடந்த மாதம் எதிர்க்கட்சித் தலைவர் கைடோ அமெரிக்கா ஆதரவுடன் தன்னை இடைக்கால ஜனாதிபதியாக அறிவித்துக் கொண்டு சர்வதேச நாடுகளின் உதவியுடன் வெனிசுவேலா மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி வழங்க வேண்டும் கோரி வருகின்றார்.

இதன்காரணமாக வெனிசுவேலாவில் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7