LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, February 19, 2019

ஐரோப்பிய ஆணையத் தலைவர் – தெரேசா மே நாளை சந்திப்பு!

நாளை பிரஸ்ஸல்ஸ் பயணிக்கவுள்ள பிரித்தானிய பிரதமர் தெரேசா மே, ஐரோப்பிய ஆணையத் தலைவர் ஜீன்-க்ளூட் ஜுங்கர் மற்றும் ஏனைய ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவாரென அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் நொவம்பர் மாதம் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரித்தானியா இடையே ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை பிரித்தானிய நாடாளுமன்றம் கடந்த மாதம் நிராகரித்ததுடன் ஒப்பந்தத்தில் மாற்றங்களை ஏற்படுத்துமாறும் உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து சமீபத்திய நாட்களில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரித்தானிய அதிகாரிகளிடையே இடம்பெறும் பேச்சுவார்த்தைகளில் பிரெக்ஸிற் ஒப்பந்தத்தில் நாடாளுமன்றத்தால் முன்வைக்கப்பட்ட மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு பிரித்தானியா முயற்சி செய்துவருகிறது.

இந்நிலையில் நாளையதினம் மீண்டும் ஐரோப்பிய ஆணையத் தலைவர் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுடன் மீண்டும் பிரெக்ஸிற் தொடர்பான பேச்சுவார்த்தைகளை மே முன்னெடுக்கவுள்ளார்.

பிரித்தானிய பாராளுமன்றத்தின் ஆதரவைப் பெறக்கூடிய ஒப்பந்தமொன்றை எட்டமுடியுமா என்பது குறித்து இச்சந்திப்பில் விவாதிக்கப்படுமென ஐரோப்பிய ஆணையத்தின் செய்தித்தொடர்பாளர் மார்கரிட்டீஸ் ஷினாஸ் தெரிவித்துள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7