(பாண்டி)
நாரதர் கலகம் நன்மையில் முடிவடைவது போல மைத்திரி கலகமும் இப்பொழுது நன்மையில் முடிவடைந்துள்ளது.எனது அமைச்சில் கடந்த காலத்தில் இருந்ததை விட அதிக பொறுப்புக்கள் கிடைத்துள்ளன என தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.இன்று மட்டக்களப்பு சந்திவெளி சித்திவிநாயகர் வித்தியாலயத்தில் இன்று திங்கள் கிழமை இடம்பெற்ற வருடாந்த மெய்வல்லுனர் திறநாய்வு விளையாட்டு போட்டியில் பிரத அதிதியாக கலந்த கொண்டு உரையாற்றும் பேதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.பாடசாலை அதிபர் ம.சிவசுந்தரம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன் ஞா.சிறிநேசன் கோறளைப்பற்று தவிசாளர் திருமதி ஷோபா ஜெயரஞ்சித் கல்குடா வலயக் கல்விப்பணிப்பாளர் தி.ரவி ஆகியோர்கள் கலந்த கொண்டனர்.அவர் அங்கு மேலும் உரையாற்றும் போது தெரிவித்ததாவது.
கடந்த காலத்திலே சும்மா ஓட்டிக்கொண்டிருந்த உட்கட்டமைப்பு வசதி வாய்ப்பு அபிவிருத்தி என்ற விடயம் அதிகார பூர்வமாக சமூக மேம்பாடு என்ற பேரிலே வந்து எனது அமைச்சின் பேர் பட்டியலுக்குள்ளே நாற்காலி போட்டு அமர்ந்து விட்டது.அதே போல இந்து கலாச்சார அமைச்சும் வந்து அமர்ந்து விட்டது.
நான் விளையாட்டு பிள்ளைதான் ஆனால் அரசியலில் விளையாட்டு பிள்ளை இல்லை.ஏன் கூறுகின்றேன் என்றால் அரசியலிலே எ;ந்த கொம்பனும் என்னுடன் விளையாட முடியாது தெளிவாக இருக்கின்றேன்.
நாட்டிலே வாழ்கின்ற தமிழ் மக்கள் நாங்கள், வடக்கிலே, கிழக்கிலே, தெற்க்கிலே, மலை நாட்டிலே, மேற்கிலே எல்லோரும் ஒன்றாக கரம் கோர்த்துக் கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் முற்போக்கு முன்னனி மற்றும் ஏனைய கட்சிகளும் ஒன்றாக கரம் கோர்த்துக்கொண்டுதான் வாக்களித்து இந்த அரசாங்கத்ததை உருவாக்கியிருக்கின்றோம்.
மைத்திரிபால சிறிசேன அவர்களை ஜனாதிபதியாக நாங்கள்தான் அமரச் செய்திருக்கின்றோம்.அதேபோல் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவையும் கூட நாங்கள்தான் பதவியில் அமரச் செய்திருக்கின்றோம்.ஆகவே அவர்கள் இருவரும் சண்டை பிடித்துக்கொள்ளலாம் பிரச்சினை கிடையாது.ஆனால் இருவரும் சேர்ந்து எங்கள் மக்கள் தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கூடிய கடப்பாடு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் நிச்சயமாக இருக்கிறது என்று கூறி வைக்க விரும்புகின்றேன்.
நாங்கள் நாட்டின் எந்த பாகத்தில் வாழ்ந்தால் என்ன, அரசியல் தீர்வையோ, அல்லது அபிவிருத்தியையோ, தமிழ் மக்களுக்கு வழங்க மறுக்கிறார்களோ, என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அவர்கள் இருவரும் சேர்ந்து அரசியல் தீர்விற்க்கும் பெப்பே காட்டுகின்றனர். அபிவிருத்திக்கும் பெப்பே காட்டுகின்றனர். இவர்கள் இவ்வாறு பெப்பே காட்டுவார்களானால் நாம் எல்லோரும் சேர்ந்து எதிர்வரும் தேர்தலிலே கரம் கோர்த்துக்கொண்டு பெப்பே காட்டுவோம். அதுதான் உன்மை.
மக்களின் ஆதங்கத்தை ஆவேசத்தை மனக் குமுறலை மட்டக்களப்பு மக்களின் கோபத்தைத்தான் மனோகணேசன் ஆகிய நான் பிரதிபலிக்கின்றேன் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
சந்திவெளிப்பாலம் கிண்ணையடி பாலம் நரிப்புல் பாலம் மண்டுர் பாலம் அம்பிளான்துறை பாலம் போன்றவை கட்டுவதாக வாக்குறியளிக்கப்பட்டு அதற்கான மதிப்பீடுகளும் எடுக்கப்பட்டு தொகையும் நிர்ணயிக்கப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு மக்களிடம் வந்து கை தட்டல், ,மலர்மாலை,பொன்னாடைகளை வாங்கி போயிருக்கிறார்கள். யாரோ எவரோ அவ்வாறு போனவர்களுக்கு ஜனாதிபதியும் பிரதமரும் பொறுப்புக் கூறவேண்டும்.





