LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, February 12, 2019

'அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற வாக்குறுதிகள் காற்றில் விடப்படுவனவாக இருக்கக் கூடாது'.-பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன்-

                                                                       (பாண்டி)
வருகின்ற பாதீட்டில் தொழிற்சாலைகள் அமைக்கின்ற, தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்ளும் விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற வாக்குறுதிகள் காற்றில் விடப்படுவனவாக இருக்கக் கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

சந்திவெளி சித்தி விநாயகர் வித்தியாலத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்;டியில் அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற வாக்குறுதிகள் காற்றில் விடப்படுவனவாக இருக்கக் கூடாது. எனவே தற்போதைய நல்லிணக்க அமைச்சராக இருக்கும் எமது மனோகணேசன் அவர்கள் அமைச்சரவை அந்தஸ்துப் பெற்ற ஒரு அமைச்சராக இருக்கின்றமையால் எமது படுவான்கரை எழுவான்கரைப் பிரதேசங்களுக்கான இணைப்புகளை ஏற்படுத்தவதற்கு இந்தப் பாலங்கள் அவசியமாக இருக்கின்றன. எனவே அமைச்சர் அவர்கள் சந்திவெளிக்கு வந்ததற்கு ஓர் அடையாளமாக சந்திவெளி திகிலிவெட்டைப் பாலத்தினை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 இதே போன்று எமது பிரதேசங்களில் பல விளையாட்டு மைதானங்கள் பல குறைபாடுகளுடன் காணப்படுகின்ற. எனவே அவற்றையும் நிவர்த்தி செய்து தர வேண்டும். கடந்த காலத்தில் 25 மைதானங்களை நான் பௌயர் குறிப்பிட்டுத் தந்திருந்தேன் கடந்தமுறை அதற்கான நிதி கிடைக்கவில்லை இந்த முறையாவது உங்களுடைய நிதியில் இருந்து இந்த மைதான அபிவிருத்திக்குரிய விடயங்களையும் பாடசாலை அபிவிருத்திக்குரிய விடயங்களையும் செய்து தரவேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

வருகின்ற வரவு செலவுத் திட்டத்தின் போது தொழிற்சாலைகள் அமைக்கின்ற விடயம், பாலங்கள், வீதிகள் அமைக்கின்ற விடயம், தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்ளும் விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.









 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7