LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, February 17, 2019

கிரேக்க அமைச்சரவையில் மாற்றம்!- முக்கிய பதவிகளில் மாற்றமில்லை

கிரேக்க அமைச்சரவை மறுசீரமைக்கப்பட்டுள்ளதாக, அரசாங்க பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த அமைச்சரவை மாற்றம் இடம்பெற்றுள்ளது. எனினும், முக்கிய பதவிகளில் மாற்றம் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

பதில் வெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்றிவரும் ஜோர்ஜ் காட்ரூகலோஸ் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பதில் மற்றும் பிரதி வெளியுறவுத்துறை அமைச்சர்கள், சமூக பாதுகாப்பு பிரதி அமைச்சர், உட்கட்டமைப்பு பிரதியமைச்சர், குடியேற்ற கொள்கைக்கான பிரதி அமைச்சர் ஆகியோர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பிரதமர் அலெக்சிஸ் சிப்ராசின் அமைச்சுப் பொறுப்புக்களில் எவ்வித மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களுக்கான பதவிப் பிரமாண நிகழ்வு எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எதென்ஸ் மற்றும் தெஸ்ஸலோனிகி மேயர் பதவிக்கு, இரண்டு முன்னாள் துணை அமைச்சர்கள் வேட்பாளர்களாக போட்டியிடுவதால் இந்த அமைச்சரவை மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7