LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, February 9, 2019

தனது இறப்பிற்கு முன் மரண அறிவித்தலை எழுதி வெளியிட்ட ஒன்ராறியோ பெண்!

ஒன்ராறியோவை சேர்ந்த ஒரு பெண்ணொருவர் தனது மரண அறிவித்தலை தானே எழுதியிருப்பது தற்போது உலகில் பேசுபொருளாக மாறியுள்ளது.

தனது 82ஆவது வயதில் இம்மாதம் 2ஆம் திகதி சைபால் மேரி ஹிக்ஸ் இறந்தார். குறித்த தினத்திலேயே அவரது மரண அறிவித்தல் வெளியானது.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “எனது மூத்த மகள் பிரெண்டா அருகில் இருக்க, 2019ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி காலை 8.20 மணியளவில் எனது உயிர் அமைதியாக பிரிந்தது.

ஒப்புக் கொள்வதற்கு கஷ்டமாகத்தான் இருக்கிறது, ஆனால் என்ன செய்வது, நான் இறந்து போனேன்” என்று தொடங்கும் வித்தியாசமான அந்த மரண அறிவித்தல் தற்போது பெரிதாக பேசப்பட்டு வருகின்றது.

இறந்தும் தன் நகைச்சுவை உணர்வால் தன் குடும்பத்தாரை சிரிக்க வைத்த சைபால் மேரி ஹிக்ஸ்ஸின் மரண அறிவித்தல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த அறிவித்தலில் தனது குடும்பத்தாருக்கும் முக்கியமாக பேரக்குழந்தைகளுக்கும் தனித்தனியே தனது அன்பை சைபால் மேரி ஹிக்ஸ் தெரிவித்துள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7