LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, February 16, 2019

பூர்வகுடியின மக்களின் வங்கி நிதியியல் செயற்பாடுகள் பாரியளவில் அதிகரிப்பு!

கனடாவில் பூர்வகுடியின மக்களின் வங்கி நிதியியல் செயற்பாடுகள், இதுவரை இல்லாத அளவு பாரியளவில் அதிகரித்துள்ளதாக கனேடிய றோயல் வங்கியின் பூர்வகுடியின வங்கி விவகார பணிப்பாளர் டேல் ஸ்டர்கர்ஸ் தெரிவித்துள்ளார்.

பூர்வகுடியின மக்கள் சமூகத்தைச் சேர்ந்த வாடிக்கையாளர்களின் வங்கி வைப்புக்களைப் போன்றே வங்கிக் கடன் பெறுகைக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கையும் சடுதியாக அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

றோயல் கனேடிய வங்கியில் பழங்குடியின மக்களின் வங்கி வைப்புக்கள் மற்றும் கடன் பெறுகைகள் என்பன ஓராண்டுக்குள் பதினெட்டு வீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த காலங்களைப் போன்று அல்லது பூர்வகுடியின மக்கள் வங்கிக் கடன்களை கோரும் காரணங்கள் மற்றும் கடன் தொகை அளவு வெகுவாக அதிகரித்துள்ளது எனவும், எரிபொருள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் இவ்வாறு அதிகளவு கடன்கள் பெற்றுக்கொள்ள பழங்குடியின சமூகத்தினர் அதிக ஆர்வம் காட்டி வருவதாகவும் குறிப்பிடப்படுகிறது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7