’90ml’ திரைப்படத்தின் டிரெய்லருக்கு சமூக ஊடகங்களில் எழுந்துள்ள விமர்சனங்களுக்கு நடிகை ஓவியா பதிலளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “பழத்தைச் சுவைக்கும் முன்பே விதையை தீர்மானிக்காதீர்கள். முழுப்படத்தையும் பார்க்கும்வரை காத்திருங்கள். டிரெய்லரைப் பார்த்துமுழுப் திரைப்படத்தையும் தீர்மானிக்காதீர்கள். எனக் கூறியுள்ளார்.
இத்திரைப்படத்தில் இரட்டை அர்த்த வசனங்கள் அதிகம் இருந்ததால் தணிக்கையில் ‘ஏ’ சான்றிதழ் பெற்றுள்ளது.
இத்திரைப்படத்தின் டிரெய்லர் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.
டிரெய்லரில் முகம் சுளிக்கும்படியான காட்சிகளும் வசனங்களும் இடம் பெற்றுள்ளதை அடுத்து, பெண்ணியவாதிகள் இத்திரைப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று தங்கள் கோபத்தை சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பதிவு செய்துள்ளனர்.
கதாநாயகியை மையப்படுத்தி எடுத்ததிரைப்படம் என்பதால் ’90ml’இல் தான் நடித்ததாகவும் ஓவியா தெரிவித்துள்ளார்.






