LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, February 15, 2019

சிம்பாப்வேயில் சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 23 பேர் மாயம் – தேடும் பணிகள் தீவிரம்

சிம்பாப்வேயில் தங்க சுரங்கத்தில் புகுந்த 23 பேர் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போயுள்ளனர். இந்நிலையில் அவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.

சிம்பாப்வே நாட்டில் விலை மதிப்புமிக்க பிளாட்டினம், வைரம், தங்கம், நிலக்கரி மற்றும் தாமிரம் போன்றவை அதிகளவில் உள்ளன.

இதனால் அவற்றை எடுப்பதற்காக சுரங்கங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அந்நாட்டின் ஹராரே நகருக்கு தென்மேற்கே கடோமா நகரில் அமைக்கப்பட்ட தங்க சுரங்கங்கள் சில செயற்படாமல் உள்ளன.

அங்குள்ள ஒரு சுரங்கத்திற்குள் 23 பேர் சென்றுள்ள நிலையில், கடும்மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத்துள் நுழைந்த அவர்கள் காணாமாற்போயுள்ளனர்.

வெள்ளத்தில் சிக்கி 23 பேரும் உயிரிழந்திருக்கக் கூடும் என அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் மீட்பு பணியாளர்கள் நீரை வெளியேற்றி அவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7