(பாண்டி)
2030ல் லீ குவான் யூ கண்ட நாட்டைவிட மேன்மையான ஒரு இலங்கையைக் கட்டியெழுப்புவதே ஜனாதிபதியின் நோக்கமாகும். அநத நோக்கத்தில் கிராமியப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று வட மத்திய மாகாண ஆளுனர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்தார்.
இலங்கையை வறுமையிலிருந்து விடுவிக்கும் தேசிய வேலைத்திட்டமான ஜனாதிபதியினுடைய கிராம சக்தி மக்கள் இயக்க வேலைத்திட்டத்தின் கிழக்கு மாகாணத்துக்கான செயற்குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவவாறு தெரிவித்தார்.
இன்று வெள்ளிக்கிழமை 08ஆம் திகதி பகல் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் டேர்பா மண்டபத்தில் நடைபெற்ற கிராம சக்தி மக்கள் இயக்கத்தின் கிழக்கு மாகாணத்துக்கான செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
ஜனாதிபதியின் கிழக்கு மாகாணத்துக்கான விஜயத்துடனான நிகழ்வாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழவில் தவிர்க்க முடியாத காரணத்தினால் ஜனாதிதபி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்ளவில்லை.
கிழக்கு மாகாண பிரதம செயலாளரின் வரவேற்புரையுடன் ஆரம்பமான இந்தச் செயற்குழுக் கூட்டத்தில், கிழக்கு மாகாண ஆளுனர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, பாராளுமன்ற உறுப்பினரகளான சீயோகேஸ்வரன், எஸ்.வியாளேந்திரன், மட்டக்களப்பு மாநகர சபை மேயர் ரி.சரவணபவன், உள்ளுராட்சி சபைகளின் தவிசாளர்கள், கிழக்கு மாகாணத்தின் அனைத்து திணைக்களங்களையும் சேர்ந்த தலைவர்கள் உள்ளிட்ட பலரும் பலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யு.எல்.எம்.அசீஸ், கிராம சக்தி வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் சி.டி.களுவாராச்சி, முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் ஆரியபதி கலபதி, ஜனாதிபதியின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான இணைப்புச் செயலாளர் டாக்டர் கோல்டன் பெர்ணான்டோ மற்றும் பலரும் இதன் போது பங்கு பற்றினர்.
இச் செயற்குழுக் கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா உதயகுமார், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க ஆகியோரின் கிராம சக்தி வேலைத்திட்டத்தின் மாவட்ட முன்Nனுற்றம் தொடர்பான சமர்ப்பணங்கள் நடைறெ;றதுடன், கிராம சக்தி மக்கள் சங்கங்கள் மற்றும் சநதைப்படுத்தலுக்கான நிறுவனங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது.
தொடர்ந்து உரையாற்றிய வட மத்திய மாகாண ஆளுனர், கடந்த காலத்தில் அரசாங்கத்தினால் பல்வேறு வறுமை ஒழிப்புத்திட்டஙகள நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தாலும் அவற்றின்முழுமையான பயன்கள் மக்களுககும் நாட்டுக்கும் கிடைக்கவில்லை. அதே நெரத்தில் கடந்த 30 வருடங்களுக்கும் மேலான யுத்தத்தினால் இழந்து பொன பொருளாதாரத்தினையும் கட்டியெழுப்ப வேண்டிய தேவையுள்ளது. இதற்கான முக்கியமானதொரு வெலைத்திட்டமாக கிராம சக்தி வேலைத்திட்டம் ஜனாதிபதியானல் முன்னெடுக்கப்படுகிறது. இதற்கு அனைவருடைய ஒத்துழைப்பும் அவசியமாகின்றது.
யுத்தம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டமிகவும் மோசமாகப்பாதிக்கப்பட்டதை நான் அறிவேன். கிராமஙகளின் மக்கள் நேரடியாகப்பங்கெடுக்கும் வகையில் இந்த கிராம சக்தி மக்கள்இயக்க வேலைத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. கிராமத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அரசாங்க அதிகாரிகள் இருக்கின்றனர். விசேடமாக கிராம சக்தி வேலைத்திட்டத்தினைப் பார்க்குமு; போது இது ஒரு விசேடமான திட்டமாகும். கிராம மக்கள் தமது கிராமங்களுக்கு உரித்தான கைத்தொழில்களை ஆக்கபூர்வமாக உருவாக்கச் செயற்படுகிறார்கள். இது கிராமங்களுடைய வேலைத்திட்டம்.
அரசியல்வாதிகளை உள்வாங்காத வைகயில் கடந்த ககாலத்தில் அதிகாரிகளினை மாத்திரம் பயன்படுத்துதல் தொடர்பில் விமர்சனங்கள்எழுந்தன. இந்தப்பிரச்சினை வந்தபோது அவர்களையுமு; உள்வாங்குவதற்கு ஆலோசித்தார். அதற்கு ஏற்றவகையில் இந்தச் செயற்குழுக் கூட்டம் நடைபெறுகிறது.
அதன் தொடர்சசியாக கிராம மககளைத் தெளிவூட்டுதல், அரச அதிகாரிகளுக்கான தெளிவூட்டல்கள் தேவைப்படுகின்றன. அக்கறையில்லாமல் எந்த வொரு விடயத்தினையும் பூரணப்படுத்த முடியாது. அதன் அடிபபடையில் அக்கறையினைககொடுக்கும் வேலைத்திட்டங்களாலேயே பொருளாதாரத்தினை முன்னேற்ற முடியும். வலப்பனை கெவுலப்பத்தனை கிராமத்தில் நடைபெற்ற கிராம சக்தி வேலைத்திட்டத்தில் நான் நேரடியாகக்கண்ட விடயத்தினை இதற்கு உதாரணமாகச் சொல்ல விரும்புகிறேன்.
அங்கு இது போன்ற கோப்பி உற்பத்தி, Nனீ வளர்ப்பு, அந்தூரியம் வளர்ப்பு, பொலித்தீன் பாவனையை இல்லாமல் செய்யும் வகையிலான பைகள் உள்பத்தி ஆகிய நான்கு திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. அக்கிராமத்தின் கிராம சேவையாளர், அவருடைய மனைவியும் ஒரு அபிவிருத்தி உத்தியோகத்தர். மிகச் சிரத்தையுடன் வீடுவீடாகச் சென்று இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தச் செயற்பட்டார். அவ் வேளையில் அவர்கள் தாங்கள் முன்வைக்கும் செயன் முறைகளுக்கு உரிய நடடிவக்கை எடுத்தால் சமூர்த்தி அட்டைகளை 3 மாதங்களுக்குள் திருப்பித் தருவோம் எ;று தெரிவித்தார்;கள். இதனைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
எந்தவித அரசியல் நோக்கமும் அற்ற இந்தக் கிராம சக்தி வேலைத்திட்டத்தினை அக்கறையுடன், சிரத்தையுடன் நடைமுறைப்படுத்தி 2030 ஆம் ஆண்டை எட்டும் போது லீ குவான் யூ கண்ட நாட்டைவிட மேன்மையான ஒரு இலங்கையைக் கட்டியெழுப்புவதே ஜனாதிபதியின் நோககமாகும். அந்த நோக்கத்தில் கிராமியப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களின் அதிகாரிகளின் அர்ப்பணிப்பான செயற்பாட்டில் கிராம சக்தி வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தபபட்டு வருவதைனைக்காண்பது மிக்க மகிழ்ச்சி. எதிர்காலத்திலும் இது போன்ற அர்ப்பணிப்பினை எதிர்பார்ப்பதுடன், அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்புடன் செயற்பட்டு கிராம மக்களின் தேவைகளைத் தீர்த்து சிறந்த ஜீவனோபாயத்தை உருவாக்க ஒன்றிணைவோம் என்றார்.





