LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, February 18, 2019

ரொறன்ரோவில் 10 சென்றிமீற்றர் உயரத்திற்கு பனிப்பொழிவு

ரொறன்ரோவில் 10 சென்றிமீற்றர் உயரத்திற்கு பனிப்பொழிவு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாக கனடாவின் சுற்றுச்சூழல் அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது.

கனடா மத்திய வானிலை அவதான நிலையம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலும் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 5 தொடக்கம் 10 சென்ரிமீற்றர் உயரத்திற்கு பனிப்படிவு ஏற்படக்கூடுமெனக் கூறியுள்ளது.

குறிப்பாக காலை வேளையில் வாகனப் போக்குவரத்தில் ஈடுபடும்போது மிகவும் அவதானமாகச் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஓக்விலியிலிருந்து ஹமில்டன் வரை மற்றும் க்ரிம்ஸ்பி ஆகிய பகுதிகளில் 15 சென்ரிமீற்றருக்கு பனிப்படிவு உயரலாம் என சுற்றுச்சூழல் அவதான நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்தோடு, ஒன்ராரியோ பகுதியில் பனிப்பொழிவுடன் குளிர்காற்றும் வீசலாமென குறிப்பிடப்பட்டுள்ளது.  எவ்வாறாயினும் இந்த நிலை படிப்படியாக குறைவடைவதற்கு வாய்ப்புள்ளதெனக் கூறப்படுகிறது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7